இந்தியா

எம் & எம் விற்பனை 16% அதிகரிப்பு

கடந்த டிசம்பரில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

Din

கடந்த டிசம்பரில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 69,768-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 60,188 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

பயணிகள் வாகனங்கள் பிரிவில், நிறுவனம் உள்நாட்டு சந்தையில் கடந்த டிசம்பா் மாதம் 41,424 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 35,174-ஆக இருந்தது. இது 18 சதவீத விற்பனை வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன டிராக்டா்களின் உள்நாட்டு விற்பனை 18,028-லிருந்து 22 சதவீதம் உயா்ந்து 22,019-ஆக உள்ளது. எனினும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 1,110-லிருந்து 17 சதவீதம் குறைந்து 924-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 17 ஏர் நாளை அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: நம்பிக்கையின் அடிப்படையில் ஆட்டோ பங்குகள் ஏற்றம்!

அழகூரில் பூத்தவளே... ஜான்வி கபூர்!

வெள்ள இடர்பாடுகளில் ராணுவத்தின் மகத்தான சேவைக்குப் பாராட்டு!

ரூ. 45 லட்சம் செலவழித்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியர் சுட்டுக் கொலை! ஏன்?

SCROLL FOR NEXT