மாயாவதி கோப்புப் படம்
இந்தியா

இந்தியா கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை: மாயாவதி

இந்தியா கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை; பாஜகவுக்கு பகுஜன் சமாஜ்தான் மாற்று எனவும் மாயாவதி தெரிவித்துள்ளார்.

DIN

இந்தியா கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை என்றும் பாரதிய ஜனதாவுக்கு மாற்றுக் கட்சி பகுஜன் சமாஜ்தான் எனவும் அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி இன்று தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இதனையொட்டி லக்னெளவில் செய்தியாளர்களுடன் மாயாவதி பேசியதாவது,

டாக்டர் அம்பேத்கரின் பெயரை பொதுவெளியில் எழுப்பி தலித் மக்களின் பிரச்னைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதைப்போன்று அரசியல் செய்யும் கட்சிகளிடமிருந்து வாக்காளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உத்தரப் பிரதேசம் உள்பட நாட்டில் எங்கும் இந்தியா கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை. ஏனெனில் இவர்கள் மக்கள் பிரச்னைகளுக்காக ஒன்றிணையவில்லை; சுயநலக் காரணங்களுக்காகவே இணைந்துள்ளனர்.

பகுஜன் சமாஜின் தலித் ஆதரவு வாக்கு வங்கியை பறிக்கும் நோக்கத்தில் காங்கிரஸ், சமாஜவாதி, பாஜக உள்ளிட்டவை செயல்படுகின்றன. சாதியை வைத்து அரசியல் செய்யும் இக்கட்சிகளை எச்சரிக்கிறேன். அம்பேத்கர் மற்றும் அவரின் இடஒதுக்கீட்டை வலுவாக மக்களிடையே கொண்டு சேர்த்தது பகுஜன் சமாஜ்.

அம்பேத்கரையும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் காங்கிரஸ் அவமதித்துவிட்டது. இது மறக்கப்படாது. அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் (அமித் ஷா) இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. அவரின் இச்செயலுக்குப் பின்னால் பாஜக உள்ளது என்பதையும் மறக்கமாட்டோம் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | இந்திய தேர்தல், ஆளுங்கட்சி குறித்து மார்க் ஸக்கர்பெர்க் சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரியது மெட்டா நிறுவனம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடா் மழை: வீடு இடிந்து சேதம்

2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவா் கைது

கலசப்பாக்கம், போளூரில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

ராமாலை விஜயநகரத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT