இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் Dinamani
இந்தியா

ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 12 இந்தியர்கள் பலி... 16 பேரைக் காணவில்லை: இந்திய வெளியுறவு அமைச்சகம்

ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 12 இந்தியர்கள் பலியானதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN

ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 16 பேரைக் காணவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 16 இந்தியர்களைக் காணவில்லை என ரஷிய அதிகாரிகள் தெரிவித்ததாகவும், மேலும் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

”ரஷிய ராணுவத்தில் 126 இந்தியர்கள் பணிபுரிந்தனர். அவர்களில், 96 பேர் பணியிலிருந்து விடுபட்டு இந்தியாவிற்குத் திரும்பினர். மீதமிருந்த 30 பேரில் 12 பேர் பலியானதைத் தொடந்து, 18 பேர் தொடர்ந்து ரஷிய ஆயுதப் படையில் பணியாற்றி வந்தனர்.

அவர்களில், 16 பேரைக் காணவில்லை என்ற பட்டியலில் ரஷிய ராணுவ அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் நாங்கள் ரஷிய அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். மீதமுள்ள நபர்களை முன்கூட்டியே திருப்பி அனுப்புமாறு கோரிக்கை வைத்துள்ளோம்” என்று ஜெயிஸ்வால் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT