ENS
இந்தியா

பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய எம்.பி.க்களுக்கு பேச வாய்ப்பு: மத்திய அமைச்சர்

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய எம்.பி.க்கள் பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.

DIN

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய எம்.பி.க்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.

தில்லியில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

'மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. அப்போது மக்களவை, மாநிலங்களவையின் அனைத்து எம்.பி.க்களுக்கும் அவைக்கு வர வேண்டும்.

பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி நிறைவடையும். இரண்டாம் அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறும்.

மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் விவாதங்கள் நடைபெற வேண்டும். புதிதாக பதவியேற்ற எம்.பி.க்களுக்கு அவையில் பேச வாய்ப்பளிக்கப்படும். இதற்காக எதிர்க்கட்சிகளிடமும் கோரிக்கை விடுப்போம். அனைத்து எம்.பி.க்களும் அவை செயல்பட ஒத்துழைக்க வேண்டும். இது ஆளும் கட்சிக்கு மட்டுமின்றி எதிர்க்கட்சிக்கும் உதவும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, வக்ஃபு வாரிய திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கைகள் இந்த கூட்டத்தொடரின்போது அவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT