இந்தியா

மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுடன் நிதிஷ்குமார் சந்திப்பு!

பாட்னாவில் ஓம் பிர்லா-நிதிஷ்குமார் சந்திப்பு பற்றி..

DIN

அகில இந்தியத் தலைமை அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாட்னா வந்துள்ள மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

பிகார் சட்டப்பேரவையில் 85-வது அகில இந்தியத் தலைமை அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஆளுநர் ஆரிப் முகமது கானின் அழைப்பின் பேரில், மூத்த பாஜக தலைவர் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர்.

மாநாட்டில் பங்கேற்க வந்த பிகார் முதல்வர் நிதிஷ்குமார் மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து பேசினார்.

ஓம் பிர்லாவின் அன்பான விருந்தோம்பல் என்னை மிகவும் கவர்ந்தது என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் பிகார் காவல்துறையின் மகிளா பட்டாலியனையும் அவர் வரவேற்றார். மரியாதைக்குரிய காவலரின் படங்களை வெளியிட்டு, பிகாரின் நாரி சக்திக்கு (பெண்கள் சக்தி) வணக்கங்கள். பாட்னாவில் 43 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாடு நமது நாடாளுமன்ற மரபுகளை வலுப்படுத்தவும், வளப்படுத்தவும் உதவும் என்று நம்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

SCROLL FOR NEXT