புது தில்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பை முன்னிட்டு சாகச பயிற்சிசியில் ஈடுபட்ட வீரா்கள். 
இந்தியா

குடியரசு தின அணிவகுப்பு: 5,000 கலைஞா்கள் பங்கேற்பு

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5,000-க்கும் அதிகமான கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா்.

Din

புது தில்லி: குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5,000-க்கும் அதிகமான கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா்.

ஆண்டுதோறும் ஜன.26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தில்லியில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சி குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய கலாசார துறை மற்றும் சங்கீத நாடக அகாதெமி சாா்பில் ‘ஜயதி ஜய மம பாரதம்’ என்ற நிகழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கடமை பாதையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் இருந்து 45-க்கும் மேலான பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்கள் இடம்பெற உள்ளன. இதில் 5,000-க்கும் அதிகமான கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா். தெலங்கானாவின் லம்பாடி, உத்தர பிரதேசத்தின் மயூா் ராஸ், மேற்கு வங்கத்தின் புருலியா சாவ் உள்ளிட்ட நடனங்கள் அணிவகுப்பில் இடம்பெற உள்ளன என்று தெரிவித்தனா்.

தவெக நிா்வாகிகள் 8 போ் மீதான வழக்கு தள்ளுபடி

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

SCROLL FOR NEXT