சிபிஐ  
இந்தியா

வாடிக்கையாளர்களின் நகைகளைத் திருடிய வங்கி ஊழியர்! சிபிஐ வழக்குப்பதிவு

ரூ. 8 கோடி மதிப்பிலான வாடிக்கையாளர்களின் நகைகளைத் திருடிய வங்கி ஊழியர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

DIN

திருப்பூரில் வாடிக்கையாளர்களின் நகைகளைத் திருடிய வங்கி ஊழியர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேவுள்ள கேத்தனூர் எஸ்பிஐ வங்கியில் நகைக் கடன் பிரிவில் பணிபுரிந்து வந்தவர் சேகர். 57வயதான இவர் கடந்த 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் வாடிக்கையாளர்களின் நகைகளை நூதன முறையில் கொள்ளையடித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் அடகு வைக்கும் நகைகளில் இருந்து சிறிய பாகங்களை வெட்டி எடுத்து நகைத் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

அடகு வைத்த நகைகளின் எடை முந்தைய எடை மதிப்பை விட குறைவாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கொடுத்த புகாரின் அடைப்படையில் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வாடிக்கையாளர்களின் புகாரின் அடைப்படையில் வங்கி மேலாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் கடந்த 2022 மார்ச் 12ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ரூ. 8 கோடி மதிப்பிலான வாடிக்கையாளர்களின் நகைகளை சேகர் திருடியுள்ளது உறுதி செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சேகர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதன் அறிக்கையை நீதிமன்றத்திலும் சமர்ப்பித்தனர்.

இதையும் படிக்க | டாஸ்மாக்கைவிட கோமியம் கெடுதலில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT