இந்தியா

படத் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

அவருக்குச் சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

DIN

ஹைதராபாத் : திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அவருக்குச் சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய வீடு, அலுவலகம் மட்டுமல்லாது அவருக்கு நெருங்கிய உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலம்குச்ச வேங்கட ரமண ரெட்டி என்ற இயற்பெயர் கொண்ட தில் ராஜு ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேசன்ஸ்’ என்ர பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளார். அண்மையில், அவர் ‘தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின்’ தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தயாரித்த ‘கேம் சேஞ்சர்’ மற்றும் ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ ஆகிய இரு படங்களும் இம்மாதம் வெளியாகி நல்ல வசூலை ஈட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் விஷவாயு கசிவு! 2 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்; மக்கள் வெளியேற்றம்!

2025-ல் அமெரிக்கா (புகைப்படங்களில்)!

பரபரக்கும் திருப்பரங்குன்றம்... நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா, இந்து அமைப்பினர் கைது!

சிவப்பு நிலா... அன்மோல் பலூச்!

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT