ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணாவை மருத்துவமனைக்கு அழைத்து கௌரவித்த நடிகர் சைஃப் அலி கான்.  
இந்தியா

உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்த சைஃப் அலிகான்

கொள்ளையரால் கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான தன்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் பஜன்சிங் ராணாவை அழைத்து நடிகர் சைஃப் அலி கான் நன்றி தெரிவித்தார்.

DIN

மும்பை: கொள்ளையரால் கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான தன்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் பஜன்சிங் ராணாவை அழைத்து நடிகர் சைஃப் அலி கான் நன்றி தெரிவித்தார்.

கடந்த 16-ஆம் தேதி வங்கதேச இளைஞரால் தனது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நடிகர் சைஃப் அலி கான், வீட்டிலிருந்து வெளியே தப்பி வந்ததும் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி மும்பை, லீலாவதி மருத்துவமனைக்குச் சென்றார்.

மருத்துவமனையில் இறக்கிவிடும் வரையில் அவர் நடிகர் சைஃப் அலிகான் என்பதே ராணாவுக்கு தெரியவில்லை என்றும் அவர் பயணத்துக்கான கட்டணத்தைக் கூட பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் முன் பஜன்சிங் ராணாவை மருத்துவமனைக்கு அழைத்து நடிகர் சைஃப் அலி கான் சந்தித்து நன்றி தெரிவித்தார். எப்போது உதவி தேவைப்பட்டாலும் செய்து தருவதாக நடிகர் சைஃப் அலி கான் உறுதியளித்தார்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணா கூறியதாவது:

நடிகர் சைஃப் அலி கானும் அவரது குடும்பத்தாரும் நன்றி தெரிவித்தனர். சைஃப் அலி கான் தனது தாயார் ஷர்மிளா தாகுரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவரது தாயார் என்னை ஆசிர்வதித்தார். அந்நேரத்தில் எனக்கு சன்மானம் தந்து பாராட்டினர். எப்போது உதவி தேவைப்பட்டாலும் அதை செய்து தருவதாக சைஃப் அலி கான் தெரிவித்தார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகூரில் பூத்தவளே... ஜான்வி கபூர்!

வெள்ள இடர்பாடுகளில் ராணுவத்தின் மகத்தான சேவைக்குப் பாராட்டு!

ரூ. 45 லட்சம் செலவழித்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியர் சுட்டுக் கொலை! ஏன்?

பொறியியல் பணிகள்: விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து

சமூக வலைதளங்கள் முடக்கம்! போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி! | Nepal protest

SCROLL FOR NEXT