அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் X | Dr. S. Jaishankar
இந்தியா

அமெரிக்காவில் முக்கியத்துவம் பெறும் இந்தியா!! ஏன்?

டொனால்ட் டிரம்ப் பதவியேற்புக்குபின், இந்தியாவுடன்தான் முதல் விவாதம்

DIN

டொனால்ட் டிரம்ப் பதவியேற்புக்குபின், முதல் வெளியுறவு அமைச்சரவை கூட்டத்தில் இந்தியாவுடன் முதல் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை இரவு பதவியேற்றார். தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக மார்க்கோ ரூபியோ செவ்வாய்க்கிழமையில் பதவியேற்றார். இந்த நிலையில், அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ முதலில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன்தான் விவாதித்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த இரு நாட்டு விவாதத்தில் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு டிரம்ப் முக்கியத்துவம் அளிப்பது, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி, பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது, புலம்பெயர்வோர் தொடர்பான பிரச்னை, இந்தோ - பசிபிக் விவகாரம் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.

அதிபர் பதவியேற்பு விழாவில் இந்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் இருக்கை

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இருக்கை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பதவியேற்பு விழாவில் முதல் இருக்கை வழங்கப்பட்டது, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரின் முதல் சந்திப்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் சந்திப்பு ஆகியவை சீனா மீதான அமெரிக்காவின் முன்கூட்டிய நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐஆர்சிடிசி முடங்கியது! தீபாவளியால் திணறும் ரயில் டிக்கெட் முன்பதிவு!

கால்பந்து உலகக் கோப்பை 2026: 212 நாட்டின் ரசிகர்களிடம் 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை!

நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக கொலைகள், பாலியல் வன்கொடுமைகள்! ராகுல்

கார் மீது லாரி மோதல்! 60 ஆம் கல்யாணத்துக்கு திருக்கடையூர் சென்ற தம்பதி பலி!

காளமாடனும் சாதிக் கலவரங்களும்... பைசன் - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT