கோப்புப் படம் 
இந்தியா

பஞ்சாப் எல்லைக்கு அருகே 2 ட்ரோன்கள் மீட்பு

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 2 ஆளில்லா விமானம் (ட்ரோன்கள் எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) மீட்கப்பட்டுள்ளது.

DIN

அமிருதசரஸ் : பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 2 ஆளில்லா விமானம் (ட்ரோன்களை) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) மீட்கப்பட்டுள்ளது.

வரும் 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் எல்லைப் பகுதி உள்பட நாடு முழுவதும் தீவிரமான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ்  மற்றும் ஃபாசில்கா மாவட்ட எல்லைப் பகுதியில் இருந்து இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு ட்ரோன்களை (ஆளில்லாத சிறிய ரக விமானம்) எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் (பிஎஸ்எஃப்) மீட்டுள்ளனர்.

இது தொடா்பாக பிஎஸ்எஃப் புலனாய்வுப் பிரிவு வியாழக்கிழமை கூறியதாவது:

அமிருதசரஸ் மாவட்டத்தில் உள்ள ரத்தன் குர்த் கிராமத்தில் சா்வதேச எல்லை அருகே வயல்வெளியில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 1.50 மணியளவில் ட்ரோன் மீட்கப்பட்டன. அதேபோல், ​​பஞ்சாப் போலீசாருடன் கூட்டுத் தேடலில் ஈடுபட்ட எல்லைப் பாதுகாப்புப் படையினா் ஃபாசில்கா மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில் இருந்து மற்றொரு ட்ரோனை மீட்டனர்.

இது போன்ற ட்ரோன்களை தடுப்பதற்காக எல்லையில் தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, இந்த இரண்டு ட்ரோன்களும் செயல்பாட்டை இழந்து கீழே விழுந்திருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமிருதசரஸின் ராஜதால் கிராமத்தில் பாகிஸ்தான் ட்ரோன் வீசிய நான்கு கைத்துப்பாக்கிகளை எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் மீட்டனர்.

இதேபோன்று ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ட்ரோன் ஒன்றை எல்லையைக் கடந்து அத்துமீறி பறந்தது. சுதாரித்துக் கொண்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் அதனை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து, அந்த ‘ட்ரோன்’ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிக்குள் நுழைந்து மறைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT