தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தலைநகரில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம் என்று ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் உறுதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விடியோ ஒன்றை வெளியிட்ட அவர்,
வேலைவாய்ப்பில் தனது கவனத்தை வலியுறுத்திய அவர்.. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதே எனது முதன்மையான முன்னுரிமை. ஆம் ஆத்மியின் குழு வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க விரிவான திட்டத்தைத் தயாரித்து வருகிறது.
தனது அரசின் சாதனையை எடுத்துரைத்த கேஜரிவால், பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு 2 ஆண்டுகளுக்குள் 48 ஆயிரம் அரசு வேலைவாய்ப்பினை வழங்கியதாகவும், இளைஞர்களுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான தனியார்த் துறை வேலைகளை வழங்குவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வேலைவாய்ப்பை எவ்வாறு உருவாக்குவது என்பது எங்களுக்குத் தெரியும், எங்கள் நோக்கங்கள் நேர்மையானவை. மக்களின் ஆதரவுடன் அடுத்த 5 ஆண்டுகளில் தில்லியில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம் என்று உறுதிப்படத் தெரிவித்தார்.
தில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதியும், முடிவுகள் பிப்ரவரி 8-ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக நகரில் ஆட்சியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேசமயம் பாஜகவிடம் இருந்து கடுமையான போட்டியை ஆம் ஆத்மி எதிர்கொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.