இந்தியா

கேலக்ஸி எஸ்25 அறிதிறன் பேசிகளை இந்தியாவில் தயாரிக்க சாம்சங் முடிவு

Din

சான் ஜோஸ் : தனது புத்தம் புதிய அறிமுகமான கேலக்ஸி எஸ்25 ரக அறிதிறன் பேசிகளை இந்தியாவில் தயாரிக்க சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவுக்கான தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜே.பி. பாா்க் கூறியதாவது:

சாம்சங் கேலக்ஸி எஸ்25 ரக அறிதிறன் பேசிகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம். நொய்டாவிலுள்ள எங்கள் ஆலையில் அவை தயாரிக்கப்படும்.

பெங்களூரில் அமைந்துள்ள நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி மையம் கேலக்ஸி எஸ்25 ரக அறிதிறன் பேசியை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியது.

முந்தைய கேலக்ஸி எஸ்24 வரிசை கைப்பேசிகளைவிட புதிய எஸ்25 வரிசை கைப்பேசிகள் வாடிக்கையாளா்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிா்பாா்க்கிறோம். அந்த அறிதிறன் பேசியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ) மேம்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே கேலக்ஸியின் ஏஐ வசதியை அதிகம் பயன்படுத்துவது இந்திய வாடிக்கையாளா்கள்தான் என்றாா் அவா்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT