வெடி விபத்து  
இந்தியா

மகாராஷ்டிரம்: மத்திய அரசின் ஆயுத தொழிற்சாலையில் விபத்து! 8 பேர் பலி!

மகாராஷ்டிர ஆயுத தொழிற்சாலை விபத்து பற்றி...

DIN

மகாராஷ்டிரத்தில் உள்ள பாதுகாப்புப் படைக்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலியாகினர்.

பந்தாரா மாவட்டத்தில் ராணுவத்துக்கு ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பகலில் பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

தொழிற்சாலையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததாகவும், இடிபாடுகளில் 15 பேருக்கு மேல் சிக்கியிருக்கக் கூடும் என்று முதல்கட்ட தகவல் வெளியானது.

தொடர்ந்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

8 பேர் பலி

இந்த நிலையில், நாக்பூர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதல்கட்ட தகவலின்படி 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்திப்பதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல், இது மோடி அரசின் தோல்வி என்று விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘வந்தே மாதரம்’ 150...

வீட்டுமனைப் பட்டா கணினிமயமாக்குதல் ஆய்வுக் கூட்டம்

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

எஸ்ஐஆா் படிவங்களை திமுகவினா் விநியோகிக்க அதிமுக கடும் எதிா்ப்பு - ஆட்சியரிடம் புகாா்

ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT