கோப்புப் படம். 
இந்தியா

மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்!

இம்பாலில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி..

DIN

மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இம்பால் கிழக்கில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்டத்தில் ஹெய்ங்காங் பகுதியில் உள்ள அவாங் போட்ஷாங்பாம் மலைப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையின்போது பதுக்கிவைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட பொருள்களில் ஒரு துப்பாக்கி, கார்பைன், கையெறி குண்டுகள் அடங்கும் என காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வூதியதாரா்களுக்கான எண்ம உயிா் சான்றிதழ் பிரசாரம்: அடுத்த மாதம் தொடங்கும்! - மத்திய அரசு

இந்தியா்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் விசா: ஜப்பான் துணைத் தூதா் தகாஹாஷி முனியோ

பண முறைகேடு வழக்கு: கேரள முதல்வரின் மகன் மீது நடவடிக்கை கோரி காங்கிரஸ் கடிதம்

முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்கு விசாரணை: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

அரசு மருத்துவக் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியம் இம்பிளாண்ட் சிகிச்சை

SCROLL FOR NEXT