காகதீயர் காலத்தைச் சேர்ந்த ஐந்து நாக சிற்பங்கள்  
இந்தியா

தெலங்கானாவில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு!

தெலங்கானாவில் கண்டெடுக்கப்பட்ட பழமையான சிலைகள்...

DIN

தெலங்கானா மாநிலத்தில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள குந்திரம்பள்ளி கிராமத்தில் கி.மு. 4000 ஆண்டிற்கு முந்தைய காலத்தில் செய்யப்பட்ட பளபளப்பான கல் கோடாரி கண்டெடுக்கப்பட்டது.

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் செய்யப்பட்ட கருவியான இது, 15x5x3 நீளம், அகலம், தடிமனில் கருப்பி பசால்ட் கல்லினால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கோடாரி குந்தரம்பள்ளி, எபூர் கிராமங்களுக்கிடையே கிடைத்ததாக தொல்பொருள் ஆய்வாளர் சிவனகிரிரெட்டி தெரிவித்தார்.

கண்டெடுக்கப்பட்ட கல் கோடாரி

"நம் சந்ததியின் பாரம்பரியத்தைப் பாதுகாப்போம்" என்ற விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக டாக்டர் ரெட்டி சனிக்கிழமை நடத்திய கணக்கெடுப்பின் போது இந்தக் கோடாரி அடையாளம் காணப்பட்டது.

இந்தக் கல் கருவி குந்தரம்பள்ளிக்கும் புதிய கற்காலத்திற்கும் உள்ள தொடர்பைக் குறிக்கிறது என்று கூறிய அவர், கருவி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் காகதீயர் காலத்தைச் சேர்ந்த ஐந்து நாக சிற்பங்கள் இருப்பதைக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT