புனித நீராடிய அமித்ஷா.  
இந்தியா

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அமித் ஷா, யோகி ஆதித்யநாத்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை புனித நீராடினாா்.

DIN

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை புனித நீராடினாா்.

தொடர்ந்து புனித நீராடிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நெற்றியில் துறவிகள் திலகம் இட்டனர். அமித் ஷாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜன.13 தொடங்கி பிப். 26 வரை 45 நாள்களுக்கு மகா கும்பமேளா நடைபெறுகிறது.

இந்த ஆன்மிக நிகழ்வில் மக்கள் புனித நீராடும் 6 மங்கள நாள்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மௌனி அமாவாசை புதன்கிழமை ஜன.29 நடைபெறுகிறது.

குடியரசு நாளையொட்டி பொது விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமையே மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் திரண்டனா்.

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்!

கடந்த 2 நாள்களிலும் தலா 50 லட்சம் போ் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று 1.74 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடினா்.

அதேபோல் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவும் திரிவேணி சங்கமம் பகுதியில் புனித நீராடினாா்.

கும்பமேளாவில் இதுவரை 13.21 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடியுள்ளனா். இதில் பல்வேறு உலக நாடுகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும் அடங்குவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT