PTI
இந்தியா

மகா கும்பமேளா: 15 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!

உத்தரப் பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகா கும்பமேளா’...

DIN

கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான ‘திரிவேணி சங்கமம்’ உத்தரப் பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ளது. அங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகா கும்பமேளா’ ஜன. 13 கோலாகலமாக தொடங்கியது.

மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதிவரை, 45 நாள்களுக்கு நடைபெறும் இந்த ஆன்மிக பெருநிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து சுமாா் 35 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பா் என்ற எதிா்பாா்ப்புடன் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளன.

இந்த நிலையில், ‘மகா கும்பமேளாவின்’ 16-ஆம் நாளான இன்று (ஜன. 28) காலை நிலவரப்படி, திரிவேணி சங்கமம் மற்றும் ஆற்றில் சுமார் 15 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியிருப்பதாக உத்தரப் பிரதேச அரசு நிர்வாகம் தரப்பில் வெலியிடப்பட்டுள்ள தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

இன்று (ஜன. 28) மட்டும் (காலை 9 மணி நிலவரப்படி) அங்கு சுமார் 35.50 லட்சம் பக்தர்கள் புனித நீராடியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரவி மோகன் இயக்கும் முதல் படம்: புரோமோ தேதி அறிவிப்பு!

ரூ. 30,000 கோடி சொத்தில் பங்கு வேண்டும்: கரிஷ்மா கபூரின் வாரிசுகள் வழக்கு!

சினிமா காதலி... த்ரிஷா!

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: குடியரசு துணைத் தலைவராகிறார்!

படப்பிடிப்புக்கு முன்பே 70% பின்னணி இசையை முடித்த ஸ்பிரிட் படக்குழு!

SCROLL FOR NEXT