தேசிய விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த  
இந்தியா

தேசிய விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..

DIN

தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி டேராடூனில் தொடங்கி வைத்தார்.

உத்தரகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

பிரதமர் மோடி, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் பிற முக்கிய தலைவர்கள் முன்னிலையில் இந்திய பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென் தேசிய விளையாட்டு ஜோதியை ஏந்திச் சென்றார்.

இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “உத்தரகண்டில் 38 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்கிறது. இது இந்தியாவின் அபாரமான விளையாட்டுத் திறமையைக் கொண்டாடுகிறது. இது நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களின் உணர்வை வெளிப்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT