கும்பமேளா கூட்ட நெரிசல் 
இந்தியா

கும்பமேளா கூட்ட நெரிசல்: பலி 31-ஆக உயர்வு!

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியுள்ளனா்.

செவ்வாய்க்கிழமையன்று (மாலை நிலவரப்படி) 4.64 கோடிக்கும் அதிகமானோா் கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனா். மௌனி அமாவாசையான இன்று(ஜன.29) ஒரே நாளில் 10 கோடி போ்வரை புனித நீராட வர வாய்ப்புள்ளதால் மகாகும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட சென்ற பக்தர்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்ததையடுத்து, புனித நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT