இந்தியா

பஞ்சாப் முதல்வர் இல்லத்தில் தேர்தல் அலுவலர்கள் சோதனை!

பஞ்சாப் முதல்வர் இல்லத்தில் தேர்தல் அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

DIN

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் இல்லத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தலைநகரான தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிப்.5-ல் நடைபெறும் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக களம் காண்கின்றனர்.

இந்த நிலையில், தில்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் இல்லமான கபூர்தலா இல்லத்தில் பணப் பட்டுவாடா நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றுவருகிறது. இதனால், அவரது இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தில்லி சட்டப்பேரவைத் தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளரான அதிஷிக்கு ஆதரவாக வியாழக்கிழமை கல்காஜியில் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

பிரசாரத்தில் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தேர்தல் ஆணையம் மற்றும் தில்லி காவல்துறையினரைக் கடுமையாக சாடினார். கபுர்தலா இல்லத்தில் சோதனை செய்து பஞ்சாப் மக்களை இழிவுபடுத்த பாஜகவின் விருப்பப்படி தேர்தல் அலுவலர்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் தலைவாஸுக்கு 3-ஆவது வெற்றி

போதைப் பொருள் விற்கும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் - அமித் ஷா உறுதி

ஏடிஎம் இயந்திரத்தில் நூதன திருட்டு: உத்தர பிரதேச இளைஞா் கைது

ஆம்பூா் கலவர வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு

அணுசக்தித் துறையில் தனியாா் பங்கேற்பை ஊக்குவிக்க விதிகள் உருவாக்கம்: அணுசக்தி ஆணையம்

SCROLL FOR NEXT