முகப்பு
இந்தியா

மகா கும்பமேளா: விவிஐபி பாஸ்கள் ரத்து!

மகா கும்பமேளாவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு அனுமதி ரத்து...

Updated On : 30 ஜனவரி, 2025 at 6:37 AM
யோகி ஆதித்யநாத்
பகிர்:

மகா கும்பமேளா பகுதியில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு (விவிஐபி) வழங்கப்படும் சிறப்பு அனுமதியை ரத்து செய்வதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகின்றது. மௌனி அமாவாசையான புதன்கிழமை திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராட குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்டநெரிசலில் சிக்கி 30 பேர் பலியானதாகவும் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மிக முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அனுமதி முறையை ரத்து செய்வதாகவும், மகா கும்பமேளா பகுதி நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாகவும் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்கள் செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. எந்த வாகனத்துக்கும் சிறப்பு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி, வாரணாசி, லக்னெள உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி வரும் சாலைகளில் இடையூறின்றி வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →