கேரளத்தின் திருவனந்தபுரத்தில் இரண்டு வயது சிறுவனின் சடலம் கிணற்றில் மிதந்ததையடுத்து, போலீஸார் உடலைக் கைப்பற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தின் பலராமபுரத்தில் வசித்துவந்த தம்பதி ஸ்ரீது, ஸ்ரீஜித். இவர்களுக்கு தேவேந்து(2) வயது மகன். வழக்கம்போல் சிறுவன் தூங்கிக்கொண்டிருந்தான். திடீரென குழந்தை காணவில்லை. எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில் சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை ஏற்று போலீஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பாலராமபுரத்தில் உள்ள அவர்களது வீட்டில் உள்ள கிணற்றில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களால் குழந்தையின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.
கிணற்றைச் சுற்றி சுவர் எழுப்பப்பட்டிருந்த நிலையில் சிறுவன் கிணற்றில் விழுந்தது எப்படி? அவரின் பெற்றோர் மற்றும் மாமாவிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.