முகப்பு
இந்தியா

கோயில்களில் விஐபி தரிசனம்: ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

கோயில்களில் விஐபி தரிசனத்தை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Updated On : 31 ஜனவரி, 2025 at 6:58 AM
உச்ச நீதிமன்றம்
பகிர்:

புது தில்லி: கோயில்களில் விஐபி சிறப்பு தரிசன முறையை ரத்து செய்யும் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வரம்பு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் விஐபி சிறப்பு தரிசன முறையை ரத்து செய்து உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோயில்களில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கலாம் என அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும், கோயில்களில் விஐபி சிறப்பு தரிசன முறையை ரத்து செய்யும் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரம்பு இல்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →