இந்தியா

பட்ஜெட்: நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள் வருகை!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதையடுத்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றதிற்கு வருகை தந்துள்ளனர்.

DIN

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதையடுத்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று(ஜன. 31) தொடங்கவுள்ளது.

மக்களவையில் இரு அவை உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சற்று நேரத்தில் உரையாற்றுகிறார்.

முன்னதாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா உள்ளிட்டோர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். பிற கட்சிகளின் எம்.பி.க்களும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையைக் காண வெளிநாட்டுத் தூதர்களும் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளனர்.

நாளை(சனிக்கிழமை) 2025-26 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படு்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம் அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் அலுவலகக் கட்டடத்தில் பயங்கர தீ! 17 பேர் பலி!

"பங்கிம் டா" என அவமதிப்பதா? மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: மமதா பானர்ஜி!

அனுமதியை மீறி நுழைய முயற்சி! காவல்துறை - தவெக தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு!

ஒடிசாவில் 18 மாதங்களில் 136 யானைகள் மரணம்: வனத்துறை அமைச்சர் தகவல்!

கொஞ்சம் புன்சிரிப்பு, செவ்வாய்க்கிழமைக்காக... சுஷ்மிதா ஷெட்டி!

SCROLL FOR NEXT