FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மார்ச் மாதத்தில் புதுச்சேரி பட்ஜெட் தாக்கல்!

சட்டப்பேரவை வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி கூட உள்ளதாகவும் பேரவைத் தலைவர் செல்வம் தகவல்

Updated On : 31 ஜனவரி 2025, 8:03 pm IST
புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் - dot com
பகிர்:

புதுச்சேரி சட்டப்பேரவை வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி கூட உள்ளதாக புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களுடன் பேசிய பேரவைத் தலைவர் செல்வம் ``புதுச்சேரி 15 ஆவது சட்டப்பேரவையின் 5 ஆவது கூட்டத்தொடரின் 2 ஆவது பகுதி பிப்ரவரி 12ம் தேதி காலை 9.30 மணிக்கு கூட உள்ளது. இந்தக் கூட்டத்தின்போது, 2024 - 25 ஆம் நிதியாண்டுக்கான அரசின் கூடுதல் செலவீனங்களுக்கான ஒப்புதல் பெறப்படுவதுடன், எத்தனை நாள்களுக்கு பேரவை நடத்தப்படும் என்று அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.

இதனைத் தொடர்ந்து 2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட், மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதுமட்டுமின்றி, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரை முழுவதுமாக காகிதமில்லா தொடராக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments