புது தில்லி முதல்வர் ரேகா குப்தா ANI
இந்தியா

5 டிவி, 14 ஏசி.. ரூ.60 லட்சத்தில் புனரமைக்கப்படும் தில்லி முதல்வர் மாளிகை!

5 டிவி, 14 ஏசிகளுடன் ரூ.60 லட்சத்தில் புனரமைக்கப்படுகிறது தில்லி முதல்வர் மாளிகை!

DIN

புது தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ மாளிகையான (மாளிகை நம்பர் 1) ராஜ் நிவாஸ் மார்க், ரூ.60 லட்சம் செலவில் புனரமைக்கப்படுகிறது.

இதற்கான டெண்டரை கோரியிருக்கிறது புது தில்லியின் பொதுப் பணித் துறை. ஜூன் 28ஆம் தேதி வெளியான டெண்டரின்படி, ஜூலை 4ஆம் தேதி ஒப்பந்தம் கோரப்பட்டு, அடுத்த 60 நாள்களுக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு, இரண்டு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டன. ஒரு பங்களாவில் முதல்வர் வாழ்ந்து வரும் நிலையில், இரண்டாவது பங்களா, முகாம் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலயில், முதல் பங்களாவை, ரூ.60 லட்சம் செலவிட்டு புனரமைக்கவும், பெரும்பாலும் எலக்ட்ரானிக் வசதிகள் தான் செய்யப்படுவதாகவும் தெரிகிறது. இந்த பங்களாவில் 5 டிவி, 14 ஏசி, யுபிஎஸ் வசதிகள் ஏற்படுத்தவும், ரிமோட் வசதியுடன் 23 மின் விசிறிகள், வாஷிங்மெஷின், டிஷ்வாஷர், மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்டவை பொருத்தவும் டெண்டரில் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம், தில்லி முதல்வராக பொறுப்பேற்ற ரேகா குப்தா, தான் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வாழ்ந்து பங்களாவில் குடியிருக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது, அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவில் புனரமைக்கும் பணிகள் நடைபெறவிருக்கிறது.

New Delhi Chief Minister Rekha Gupta's official residence (House No. 1) at Raj Niwas Marg is being renovated at a cost of Rs. 60 lakh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT