கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் 
இந்தியா

அச்சுதானந்தன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்!

கேரள முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..

DIN

கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி. எஸ். அச்சுதானந்தன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட அச்சுதானந்தன் கடந்த ஜூன் 23-ஆம் தேதி மூச்சுத் திணறலும் மாரடைப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

இதுதொடர்பாக புதன்கிழமை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மூத்த தலைவர் அச்சுதானந்தன் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. செவ்வாய்க்கிழமை, அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட சிறப்புக் குழு மருத்துவமனைக்குச் சென்று அவரது சிகிச்சையை மதிப்பாய்வு செய்தது.

101 வயதான தலைவர் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டு, நிபுணர்கள் குழுவின் பராமரிப்பில் உள்ளார். அவரது முக்கிய உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

வயது முதிர்வால் அச்சுதானந்தனின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று மருத்துவர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. எனினும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், அவரது சிறூநீரக செயல்பாடு மோசமாகியுள்ளதாகவும், ரத்த அழுத்தமும் சீராக இல்லையென்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

Former Kerala Chief Minister V S Achuthanandan remains in critical condition at a private hospital after suffering a cardiac attack.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT