மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில், புதியதாக 14 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் அவ்வப்போது அதிகரித்து வந்த சூழலில், இன்று (ஜூலை 3) 14 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், 2025-ம் ஆண்டில் மட்டும் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2,547 ஆக உயர்ந்துள்ளதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நாக்ப்பூரைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார். இதனால், அம்மாநிலத்தில் கரோனா பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் 31,804 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரில் 2,436 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், மும்பை நகரத்தில் மொத்தம் 998 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில், ஜூன் மாதத்தில் மட்டும் 551 பாதிப்புகள் உறுதியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.