இந்திய தொழிலதிபர்களில் முன்னணியில் இருக்கும் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் ஆன்டிலியா வீடுதான், மும்பையின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைக் கொண்டிருந்தது.
தெற்கு மும்பையில் உள்ள பலரது கவனத்தையும் ஈர்க்கும் ஆன்டிலியாவின் பெருமையை, லோதா குழுமம் கட்டியிருக்கும் புதிய கோபுரக் கட்டடம் பறித்துக் கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.
லோதா குழுமத்தால், தெற்கு மும்பையின் அல்டாமௌண்ட் சாலையில், கோவாலியா டேங்க் அருகே இந்த லோதா அல்டாமௌன்ட் கட்டப்பட்டுள்ளது. இது 640 அடி உயரத்துடன், 43 தளங்கள் கொண்டதாக இருக்கிறது. இதில் 52 குடியிருப்புகள் உள்ளன. ஹாதி தெஹ்ரானியின் வடிவமைப்பில், உருவாக்கப்பட்ட இந்த கட்டடம், ரூ.15,000 கோடி மதிப்பிலான ஆன்டிலியாவின் உயரத்தை விட அதிகம்.
இதில், ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாம். அரபிக் கடலைப் பார்ப்பது போல குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த குடியிருப்புக்கோபுரம்தான், இந்தியாவிலேயே மிக உயரமான கட்டடங்களில் 68வது இடத்தைப் பிடித்துள்ளது.
தற்போது ஆன்டிலியாவும், லோதா அல்டாமௌண்ட் கட்டடமும் மிகவும் பிரபலமான ஆல்டாமௌண்ட் சாலையில்தான் அமைந்துள்ளது. இங்கு அம்பானியின் குடும்பத்தினர் மட்டுமல்ல, இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் சிலரும் வாழ்ந்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.