இந்திய பங்குச் சந்தையில் ஏமாற்றி ரூ.36,500 கோடி மோசடி செய்த அமெரிக்க வர்த்தக நிறுவனத்துக்கு இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியம் (செபி) தடைவிதித்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள ஜேன் ஸ்ட்ரீட் என்ற நிறுவனம் 2000 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஆசியாவில் என மொத்தம் 9000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இந்த நிறுவனம் சுமார் 45 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
கடந்தாண்டு மட்டும் 20.5 பில்லியன் டாலர் (ரூ. 1.75 லட்சம் கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், ஜேன் ஸ்ட்ரீட் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் செய்த முதலீட்டிலும், வர்த்தகத்தின் வாயிலாகவும் சுமார் ரூ.32,681 கோடி லாபத்தை பெற்றுள்ளதாக செபி கணக்கிட்டுள்ளது.
செபி அளித்துள்ள அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆப்ஷன் வர்த்தகத்தில் மட்டும் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம், 5 பில்லியன் டாலர்கள் (ரூ.36,671 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. இதில், ரூ.4,843 கோடி சட்டவிரோதமாக சம்பாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரியவந்திருக்கிறது.
2023 ஆம் ஆண்டு ஜேன் ஸ்ட்ரீட் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இருந்தாலும், அப்போதைய காலகட்டத்தில் ஒரு பில்லியன் டாலர் சம்பாதித்ததாகவும் கணக்கு காட்டியுள்ளது ஜேன் ஸ்ட்ரீட்.
அதன்பின்னர், ஜேன் ஸ்ட்ரீட் மீது குற்றம் சாட்டப்பட்டு இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டது. மேலும், ஜனவரி 2023 முதல் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை வெவ்வேறான மாறுபட்ட 21 வேலை நாள்களில் நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டிகளில் ஜேன் ஸ்ட்ரீட் முறைகேடுகளில் ஈடுபட்டதை செபி கண்டறிந்துள்ளது.
ஸ்டாக் ரிக்கிங் என்று சொல்லப்படக்கூடிய, காலையில் அதிகளவிலான பங்குகளை வாங்கி அவற்றுக்கு அதிக மதிப்பு இருப்பது போல் காட்டிவிட்டு அடுத்த நாள் அதை விற்றுவிட்டு அதிக முதலீடு பார்த்தால், ஜேன் ஸ்ட்ரீட் கையும் களவுமாக சிக்கியுள்ளது. இது ஆப்ஷனல் வர்த்தகர்களை மட்டுமின்றி மொத்த பங்குச் சந்தையையும் கடுமையாக பாதிக்கும்.
ஜேன் ஸ்ட்ரீட்டுக்கு இண்டெக்ஸ் ஆப்ஷன் மூலம் ரூ.44,358 கோடி லாபமும், பங்குகளில் ரூ.7,208 கோடி மற்றும் இண்டெக்ஸில் ரூ.191 கோடி இழப்பும், ரூ.288 கோடி பண இழப்பும் ஏற்பட்டுள்ளதை செபி கண்டறிந்துள்ளது. இதில், நிகர லாபமாக ஜேன் ஸ்ட்ரீட்டுக்கு ரூ. 36,671 கோடி லாபம் கிடைத்துள்ளது. சட்டவிரோதமாக ரூ.4,843 கோடி கிடைத்திருக்கிறது.
ஜேஎஸ் முதலீடுகள், ஜேஎஸ்I2 முதலீடுகள் பிரைவேட் லிமிடெட், ஜேன் ஸ்ட்ரீட் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட், ஜேன் ஸ்ட்ரீட் ஆசியா டிரேடிங் ஆகிய நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குகளை வாங்க விற்கத் தடைவிதித்து செபி உத்தவிட்டுள்ளது.
இதையும் படிக்க: உலகின் முதல் நாடாக தலிபான் அரசை அங்கீகரிக்கும் ரஷியா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.