முகப்பு
இந்தியா

டிரினிடாட் - டொபேகோ பிரதமருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!

டிரினிடாட் - டொபேகோ பிரதமருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி..

Updated On : 4 ஜூலை, 2025 at 4:08 AM
டிரினிடாட் - டொபேகோ பிரதமருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி - Photo: Modi / X
பகிர்:

டிரினிடாட்-டொபேகோ குடியரசு நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்ஸேசருக்கு கும்பமேளா புனித நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளித்துள்ளார்.

கானா, டிரினிடாட்-டொபேகோ குடியரசு, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான ஒருவார கால அரசுமுறைப் பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார்.

கானா பயணத்தை முடித்துவிட்டு வியாழக்கிழமை டிரினிடாட்-டொபேகோ குடியரசு நாட்டுக்கு பிரதமர் சென்றார். அங்கு பாரம்பரிய முறைப்படி மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்ஸேசர் மோடிக்கு வாழை இலையில் விருந்து வைத்தார்.

இந்த விருந்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கமலா பெர்சாத்துக்கு அயோத்தி ராமர் கோயில் மாதிரியையும் சரயு நதி புனித நீர் மற்றும் மகா கும்பமேளா புனித நீர் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த பரிசுகள், இந்தியாவுக்கு டிரினிடாட் மற்றும் டொபேகோவுக்கும் இடையேயான ஆழமான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பிணைப்புகளை அடையாளப்படுத்துவதாக மோடி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

summary

Prime Minister Narendra Modi has gifted holy water from the Kumbh Mela to the Prime Minister of the Republic of Trinidad and Tobago, Kamala Persad Bissessar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.