தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் 2 நாள்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.
இதுகுறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், இதுவரை தகவல்களின்படி, 20,000 க்கும் மேற்பட்ட பாபா பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பாபாவின் பக்தர்கள் நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் இங்கு வருகிறார்கள்.
மேலும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் அவர்களை திறந்த மனதுடன் வரவேற்கிறார்கள்.
ஜம்மு-காஷ்மீர் அரசும் ஸ்ரீஅமர்நாத் ஆலய வாரியமும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தியுள்ளன. பிந்தைய தேதிகளுக்கு பதிவு செய்துள்ள சில பக்தர்கள், திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிட்டனர்.
பொறுமையாக காத்திருக்குமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன். யாரும் வெளியேறும்படி கேட்கப்பட மாட்டார்கள்.
ஆனால் ஜூலை 4 அல்லது 5 ஆம் தேதிக்கு பதிவு செய்துள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அனைத்து பக்தர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் போதுமான தங்குமிடத்தை வழங்குவது எங்கள் முன்னுரிமை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி, ஜம்மு முகாமிலிருந்து காஷ்மீரில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கும் ஏற்கெனவே 5,892 பேர் அடங்கிய முதல் குழு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றது. இக்குழுவினரின் பயணத்தை துணைநிலை ஆளுநரும், ஸ்ரீஅமா்நாத் கோயில் வாரியத் தலைவருமான மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கிவைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
Over 20,000 pilgrims have had darshan of the naturally formed ice 'Shivling' in the holy cave shrine of Amarnath in the south Kashmir Himalayas during the first two days of the pilgrimage, Jammu and Kashmir Lieutenant Governor Manoj Sinha said on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.