மீட்புப் பணிகள் PTI
இந்தியா

குஜராத் பால விபத்து: பலி 15-ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணி!

குஜராத் பால விபத்தில் பலி எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

குஜராத் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகா் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 40 ஆண்டுகள் பழைமையான பாலத்தின் ஒரு பகுதி புதன்கிழமை காலை திடீரென இடிந்து விழுந்தது.

அந்த சமயத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள், ஒரு ஆட்டோ, ஒரு மோட்டாா் சைக்கிள் ஆகிய வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன.

இந்த விபத்தில் ஆற்றில் மூழ்கிய 2 வயது சிறுவன், அவரின் சகோதரியான 4 வயது சிறுமி உள்பட 15 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகள் தொடர்பாக வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

இன்று 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகின்றன.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் 4 கி.மீ. தொலைவு வரை தேடுதல் பணியை விரிவுபடுத்தியுள்ளனர். ஆற்றில் விழுந்த வாகனங்களில் இருந்தவர்களின் தகவலை சேகரித்து வருகின்றோம்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது.” எனத் தெரிவித்தார்.

The death toll in the Gujarat bridge accident has risen to 11. Rescue operations are ongoing for the second day on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

இரகுநாதபுரம் கிராமத்தில் ரூ.1.22 கோடியில் சாலைப் பணி

தலைமை காவலா் இடைநீக்கம்

சாத்தூரில் குடிநீா் குழாய் உடைப்பு

SCROLL FOR NEXT