மணமக்கள் (கோப்புப்படம்)
இந்தியா

வருங்கால மருமகளுடன் ஓட்டம் பிடித்த மாமனார்! நகை, பணத்தையும் எடுத்துச் சென்றதால் பரபரப்பு!

உத்தரப் பிரதேசத்தில் மகனுக்கு நிச்சயிக்கப் பெண்ணுடன் ஓட்டம்பிடித்த ஒருவரைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன், திருமணத்துக்கு வாங்கி வைத்திருந்த நகை, பணம் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷகீல். 55 வயதான இவருக்கு 6 பிள்ளைகளும், 3 பேரக்குழந்தைகளும் உள்ளனர். இவர் தன்னுடைய 15 வயது மகன் அமனுக்கு திருமணம் முடித்து வைப்பதற்காக அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 22 வயதான ஆயிஷா என்பவருடன் நிச்சயம் செய்துள்ளார்.

ஷகீலின் குடும்பத்தினர் முதலில் திருமணத்துக்கு பணம் இல்லாமல் நெருக்கடியில் இருந்து வந்தாலும், பின்னர் அதற்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்துள்ளனர். திருமணம் ஏற்பாடு என்ற பெயரில் ஆயிஷா வீட்டிற்கு செல்வதை ஷகீல் வழக்கமாக வைத்திருந்துள்ளார். ஆனால், ஷக்கீலின் நடத்தையில் அவரது மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனை அவர் இரண்டு முறை பார்த்ததாகவும், இதனால், அவரது கணவர் அவரை தகாத வார்த்தைகளில் வசைபாடியும், அவர் மீது தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார். ஷகீலும் ஆயிஷாவும் விடியோ அழைப்புகளில் பேசுவதையும், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களின் அடிப்படையில், அமன் இந்தத் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தில், ஷகீல் வேலைக்குச் செல்வதாக தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு ஆயிஷாவுடன் தில்லிக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் வீட்டிலிருந்து ரூ.2 லட்சம் மற்றும் தங்க நகையையும் எடுத்துச் சென்றுள்ளார். பின்னர், ஷகீல் தனது மனைவியைத் தொடர்பு கொண்டு ஆயிஷாவை திருமணம் செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மனம் உடைந்த ஷகீலில் மனைவி, “ஆயிஷா என் மகனின் மணமகளாக இருக்க வேண்டியவர், இப்போது அவள் என் கணவரின் மனைவி ஆகிவிட்டார்” என மனம் நொந்து கூறுகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக புகார்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உள்ளூர் காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், குடும்பத்தினர் புகாரளிக்க முன்வந்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் தந்தை ஓட்டம் பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பேசுபொருளான நிலையில், தற்போது செய்தியிலும் இடம்பிடித்துள்ளது.

இந்தியாவில் குறிப்பாக உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற வினோதமான காதல்கள் இது முதல் முறையல்ல. ஏப்ரல் மாதத்தில், பெண் ஒருவர் தனது வருங்கால மருமகனுடன் ரூ.3.50 லட்சம் மற்றும் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் எடுத்துக் கொண்டு ஓட்டம்பிடித்ததும் நினைவுகூரத்தக்கது.

UP man, 55, elopes with son’s 22-year-old fiancée, takes away Rs 2 lakh in cash and gold

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

SCROLL FOR NEXT