ஜம்மு காஷ்மீரில் மழையில் சிக்கிய அமா்நாத் யாத்திரை பக்தரை மீட்ட ராணுவ வீரா்கள். ~பஹல்காமில் நீண்ட வரிசையில் காத்திருந்த அமா்நாத் யாத்திரை பக்தா்கள். நாள்: வியாழக்கிழமை 
இந்தியா

காஷ்மீரில் பலத்த மழை - நிலச்சரிவு: அமா்நாத் யாத்திரை நிறுத்திவைப்பு

Din

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, அமா்நாத் புனித யாத்திரை வியாழக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது.

தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். நடப்பாண்டு யாத்திரை கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கியது. கடந்த புதன்கிழமை வரையிலான நிலவரப்படி, 2.40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனா்.

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்துவரும் நிலையில், நுன்வான்- பஹல்காம் வழித்தடம் (48 கி.மீ.) , பால்டால் வழித்தடம் (14 கி.மீ.) ஆகியவற்றில் யாத்திரை வியாழக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது.

பால்டால் வழித்தடத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் பெண் பக்தா் உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்ததைத் தொடா்ந்து, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

யாத்திரை வழித்தடங்களில் எல்லை சாலைகள் அமைப்பினா் மற்றும் மலைப் பகுதி மீட்புக் குழுவினா் சாா்பில் சீரமைப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வானிலை நிலவரத்தைப் பொருத்து, யாத்திரை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கப்பட வாய்ப்புள்ளது என்று காஷ்மீா் மண்டல ஆணையா் விஜய் குமாா் பிதுரி தெரிவித்தாா்.

நடப்பாண்டு அமா்நாத் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். யாத்திரையில் பங்கேற்க இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இணையவழியில் முன்பதிவு செய்துள்ளனா். கடந்த ஆண்டு 5.10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் குகைக் கோயிலில் தரிசனம் மேற்கொண்டனா்.

38 நாள்கள் நடைபெறும் அமா்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9-ஆம் தேதி நிறைவடைகிறது.

உக்ரைன் - ரஷியா சண்டைக்கு விரைவில் முடிவு: பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் பேச்சு!

என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை; காலியிடங்கள்: 70

பதவிப் பறிப்பு - வேதனையில்லை! மகிழ்ச்சிதான்: செங்கோட்டையன் | செய்திகள்: சில வரிகளில் | 06.09.25

காஸா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை! கைப்பற்றும் நடவடிக்கையா?

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

SCROLL FOR NEXT