இந்தியா

16 தமிழக கிராமங்களை மேம்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் பதில்

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த் செந்திலின் கேள்விக்கு மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திச் சேவை

நமது சிறப்பு நிருபர்

காலநிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் கடலோர கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 16 கிராமங்கள் தேர்வாகியுள்ளதாக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த் செந்திலின் கேள்விக்கு மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பதிலில், "மத்திய மீன்வளத் துறையால் பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் அங்கமாக காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் 100 கடலோர மீனவ கிராமங்களை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில், தமிழகத்தில் 16 கடலோர மீன்பிடி கிராமங்கள் மேம்பாட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

கடற்பாசி வளர்ப்பு, செயற்கை கடலடிப்பவளப்பாறைகள் அமைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் மீன்வளத் துறையில் ஏற்படும் தாக்கங்களை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் கடலோர மீன்பிடி கிராமங்களை ஊக்குவித்தல் போன்ற முன்முயற்சிகளை பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனா ஒருங்கிணைக்கிறது என அமைச்சர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

கிரேட் நிகோபார் திட்டம் பழங்குடியினர் உரிமைகளை நசுக்கும் சாகசம்! ராகுல்

சிசோடியாவை தொடர்ந்து பகவந்த் மானை நலம் விசாரித்த ஹரியாணா முதல்வர்!

ஒரு முழம் மல்லிகைக்கு ரூ.1 லட்சம் அபராதம்! நடிகை நவ்யா நாயரின் ஆஸ்திரேலிய அனுபவம்!

தமிழகத்தில் சந்திரகிரகணம் போல் ஆட்சி மாற்றம் விரைவில் நிகழும்: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT