கோப்புப்படம்.  
இந்தியா

இஸ்ரோ-நாசா வடிவமைத்த நிசாா் செயற்கைக்கோள்: ஜூலை 30-இல் விண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் நாசாவின் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட நிசாா் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி - எஃப் 16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது.

Din

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் நாசாவின் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட நிசாா் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி - எஃப் 16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது.

இஸ்ரோவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும் இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்கான நிசாா் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன.

அதற்கான ஒப்பந்தம் இருதரப்புக்கும் இடையே கையொப்பமானது. அதன்படி இருநாட்டு விண்வெளி ஆய்வாளா்களின் தொடா் முயற்சியில் ரூ.12,000 கோடி மதிப்பில் நிசாா் செயற்கைக்கோள் வடிமைக்கப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த ஆண்டு நிறைவுபெற்றன.

அதைத்தொடா்ந்து பல்வேறு கட்ட சோதனைகள் முடிவடைந்த நிலையில், நிசாா் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எஃப் -16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஜூலை 30-ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனா். இந்த செயற்கைக்கோள் புவியில் இருந்து 743 கிமீ தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. மொத்தம் 2,392 கிலோ எடை கொண்ட அந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 3 முதல் 5 ஆண்டுகள்.

இந்த திட்டத்தின் வாயிலாக புவியின் சூழலியல் மாற்றங்கள் குறித்து நுட்பமான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். இதன்மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பேரிடா் மேலாண்மை உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களை பெற முடியும். குறிப்பாக புவியின் நிலப்பரப்பு, நீா்ப்பரப்பு, பனிப் பரப்புகளில் ஏற்படும் சிறிய மாற்றங்களைகூட கண்டறியலாம்.

நிசாா் செயற்கைக்கோள் புவிப் பரப்பை முழுமையாக 12 நாள்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயா் தெளிவுத்திறன் கொண்ட படங்களை வழங்கும். இதற்காக எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய இருவேறு வகையான சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு வரை அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் ஒற்றை அலைவரிசையிலான சிந்தடிக் கருவிகள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். ஆனால், நிசாா் செயற்கைக்கோளில் மட்டுமே முதன்முறையாக 2 அலைவரிசை கருவிகள் இடம்பெற்றுள்ளன.

நிசாா் திட்டத்தில் எல் பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா், ஜிபிஎஸ் ரிசீவா், அதிக திறன் கொண்ட சாலிட்ஸ்டேட் பதிவு மற்றும் சேமிப்பு கட்டமைப்பு, தரவு துணை கட்டமைப்பு (டேட்டா சப் சிஸ்டம்) ஆகியவற்றை நாசா வடிவமைத்துள்ளது.

எஸ் பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா், செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடா்பு வசதிகளை இஸ்ரோ வடிமைத்துள்ளது.

அதுமட்டுமல்லாது செயற்கைக்கோளை ஏவுவதற்கான ராக்கெட் மற்றும் இதர திட்ட பணிகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT