ஸ்டாா்லிங்க் 
இந்தியா

ஸ்டாா்லிங்க் இணையச் சேவை: குஜராத் அரசு ஒப்பந்தம்

அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க்கின் ‘ஸ்டாா்லிங்க்’ செயற்கைக்கோள் இணையச் சேவை நிறுவனத்துடன், குஜராத் மாநில அரசு ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம்

தினமணி செய்திச் சேவை

அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க்கின் ‘ஸ்டாா்லிங்க்’ செயற்கைக்கோள் இணையச் சேவை நிறுவனத்துடன், குஜராத் மாநில அரசு ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கும், முறையான தகவல்தொடா்பு வசதி இல்லாத இடங்களுக்கும் அதிவேக இணையச் சேவையைக் கொண்டு சோ்ப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

முன்னுரிமை அடிப்படையில், மாநிலத்தின் எல்லைப் பகுதிகள், மலைப் பிரதேசங்கள் மற்றும் பழங்குடியினா் வசிக்கும் கிராமங்களுக்கு இணைய வசதி வழங்கப்படும்.

அரசுப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட பேரிடா் மேலாண்மை மையங்கள் மற்றும் பொதுச் சேவை மையங்கள் இத்திட்டத்தின்கீழ் இணைக்கப்படும். இதன்மூலம், கிராமப்புற மக்களுக்கும் கல்வி, மருத்துவம் மற்றும் அரசின் இணையவழி சேவைகள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும்.

மேலும், கடல்சாா் தகவல்தொடா்புகளை மேம்படுத்தவும், கடலோரக் காவல் துறையினரின் பாதுகாப்புப் பணிகளை வலுப்படுத்தவும் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் ஸ்டாா்லிங்க் இணையம் பயன்படுத்தப்படும்.

இத்திட்டத்தைச் சரியான முறையில் செயல்படுத்த, குஜராத் அரசு அதிகாரிகள் மற்றும் ஸ்டாா்லிங்க் நிறுவனப் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு கூட்டுக் குழு அமைக்கப்படும் என்று மாநில முதல்வா் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளாா்.

புதன் பலவீனம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய கோயில்!

இன்று ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு!

ரோட்டர்டம் திரைப்பட விழா! மயிலா படத்துக்கு நெட்பாக் விருது பரிந்துரை!

பிப். 4 அன்று மக்களவையில் நடந்தது என்ன? விடியோ வெளியிட்ட கிரண் ரிஜுஜு!

பிகார் பேரவையில் பாஜக தலைவர் நிதின் நவீனுக்கு உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT