ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி கபூர். 
இந்தியா

ஸ்ரீதேவி ஆசை நிறைவேறியது! கவனம் பெறும் போனி கபூர்! காரணம்?

உடல் எடையைக் குறைத்ததால் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றிருக்கிறார் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர்.

இணையதளச் செய்திப் பிரிவு

உடல்பயிற்சிக் கூடங்களில் மழைக்குக் கூட ஒதுங்காமல், கிட்டத்தட்ட 26 கிலோ எடையைக் குறைத்து, பார்ப்பவர்களின் கண்களை விரியச் செய்கிறார் ஸ்ரீதேவியின் கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூர்.

திரைத்துரையில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கும் போனி கபூர், அண்மை நாள்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறார். அது அவர் எடுத்தப் படங்களுக்காக அல்ல. அவரது தோற்ற மாற்றத்துக்காக

மெலிந்த தோற்றத்தில் போனி கபூரின் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. புதிய தோற்றத்தில் அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் பலரும், இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்? என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இவர் உடல் பயிற்சிக் கூடத்துக்கு எல்லாம் செல்லவில்லையாம். வாழ்முறையை சற்று மாற்றி, உடல் எடையைக் குறைத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அதாவது, இரவு உணவைத் தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக சூப் போன்று குடித்ததாகவும் காலை உணவையும் பழங்கள், பழச்சாறு, சிறுதானிய ரொட்டி போன்று எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மனதில் தன்னம்பிக்கை மற்றும் உறுதியோடு உணவில் கட்டுப்பாட்டை மேற்கொண்டதன் பயனாக அவர் உடல் தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT