மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகளைக் கையாண்ட சிறப்பு அரசு வழக்குரைஞர் உஜ்வல் நிகம் மாநிலங்களவை உறுப்பினராக இன்று(ஜூலை 24) பதவியேற்றுக் கொண்டார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் ஜூலை 21 முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து ஆகஸ்ட் 21 வரை இக்கூட்டம் நடைபெற உள்ளது.
ஜூலை 13ல் குடியரசுத்தலைவரால் உஜ்வால் நிகாம் பரிந்துரைக்கப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு அவை கூடிய நிலையில், துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் உஜ்வல் நிகம் மராத்தியில் பதவியேற்றுக் கொண்டார்.
உஜ்வல் நிகாமுடன், ஹர்ஷ் ஷ்ரிங்லா, மீனாட்சி ஜெயின் மற்றும் சதானந்தன் மாஸ்டர் ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றனர். முன்னதாக பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் ஓய்வு பெற்றதால் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப இந்த நியமனங்கள் வந்துள்ளன.
இதுதொடர்பாக உஜ்வல் கூறியதாவது,
முன்னதாக ஜூலை 13 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி அழைப்பு மூலம் நியமனம் குறித்து தனக்குத் தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாக நிகாம் பகிர்ந்துகொண்டார்.
என்னைப் பரிந்துரைத்ததற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு நன்றி. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்தித்தபோது, அவர் என் மீது நம்பிக்கை தெரிவித்தார். வேட்புமனு குறித்து தெரிவிக்க பிரதமர் மோடி நேற்று அழைத்தார். அவர் இந்தியில் பேச வேண்டுமா அல்லது மராத்தியில் பேச வேண்டுமா என்று கேட்டார். சிரிப்புக்கு மத்தியில் மராத்தியில் என்னிடம் பேசினார் என்று அவர் கூறினார்.
சிறப்பு அரசு வழக்குரைஞர் அஜ்மல் கசாப் மீதான 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை மற்றும் 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட உயர்நிலை குற்ற வழக்குகளைக் கையாளுவதில் மிகவும் பிரபலமானவர்.
பிரதமர் நரேந்திர மோடி உஜ்வால் நிகாமின் நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். சட்டத் துறை மற்றும் அரசியலமைப்பின் மீதான அவரது முன்மாதிரியான அர்ப்பணிப்பைக் குறிப்பிட்டார். அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்துவதற்கும், பொது குடிமக்கள் எப்போதும் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் நிகாமை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.