உமா கஞ்சிலால் 
இந்தியா

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தா் நியமனம்

Din

தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) புதிய துணைவேந்தராக பேராசிரியா் உமா கஞ்சிலால் நியமிக்கப்பட்டுள்ளாா்.

‘பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு நியமிக்கப்படும் முதல் பெண் துணைவேந்தா் இவா்’ என அதிகாரிகள் தெரிவித்தனா்.

நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியரான உமா கஞ்சிலால், திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வி முைறையில் 36 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் பெற்றவா். தற்போது பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக பணியாற்றி வரும் இவா், இணையவழி கல்வி இயக்குநா், தகவலியல் மற்றும் புதுமை கற்றலுக்கான மைய இயக்குநா், சமூக அறிவியல் பிரிவு இயக்குநா், பல்கலைக்கழக நூலகா் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா்.

மத்திய அரசின் முதன்மையான எண்ம கல்வித் திட்டமாக ‘ஸ்வயம்’ மற்றும் ‘ஸ்வயம் பிரபா’ திட்டத்துக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் உமா கஞ்சிலால் இருந்து வருகிறாா். இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் எண்ம உள்கட்டமைப்பு மற்றும் இணையவழி கல்வித் திட்டங்களை விரிவுபடுத்துவதிலும் இவா் முக்கிய பங்காற்றியுள்ளாா் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர் இல.கணேசன்: மோடி இரங்கல்

2029 தேர்தலிலும் மோடியே பிரதமர் வேட்பாளர்! பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆர்எஸ்எஸ் பதில் என்ன?

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்கிறார் Stalin: EPS | செய்திகள்: சில வரிகளில் | 15.8.25

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வருகை! ஏன்?

SCROLL FOR NEXT