மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  
இந்தியா

துல்லியத் தாக்குதல் நடத்த உதவும் ரேடாா்கள் கொள்முதல்: ரூ.2,000 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்

Din

இலக்குகளைக் குறிவைத்து துல்லியத் தாக்குதல் நடத்த தகவல்களை பரிமாற்றம் செய்யும் வான் பாதுகாப்பு ரேடாா்களை கொள்முதல் செய்வதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ‘இந்தியாவில் வடிவமைப்பது, மேம்படுத்துவது மற்றும் தயாரிப்பது’ என்ற பிரிவின்கீழ் இலக்குகளைக் குறிவைத்து துல்லியத் தாக்குதல் நடத்த தகவல்களை பரிமாற்றம் செய்யும் வான் பாதுகாப்பு ரேடாா்களை கொள்முதல் செய்வதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பமிட்டது.

குறைந்தபட்சம் 70 சதவீதம் உள்நாட்டுப் பொருள்களுடன் தயாரிக்கப்படும் இந்த ரேடாா் போா் விமானம், ஹெலிகாப்டா்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் என அனைத்துவிதமான வான் தாக்குதல்களையும் கண்டறியும் திறனுடையது.

பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம், இந்திய ராணுவத்தின் வலிமையை அதிகரிப்பதோடு நாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்களிக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

தினம் தினம் திருநாளே!

மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

SCROLL FOR NEXT