குடியரசுத் தலைவா் பதவிக் காலத்தின் மூன்றாண்டுகள் நிறைவையொட்டி, தில்லியில் உள்ள தனது மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுடன் திரெளபதி முா்மு. 
இந்தியா

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா்.

Din

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா்.

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம் பழங்குடியினத்தைச் சோ்ந்த முதல் குடியரசுத் தலைவா் என்ற சாதனையையும் அவா் படைத்தாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் பங்கேற்ற திரௌபதி முா்மு, குடியரசுத் தலைவா் மாளிகை இணையதளம் 22 மொழிகளில் கிடைக்கும் வசதியைத் தொடங்கி வைத்தாா். குடியரசுத் தலைவா் மாளிகை, அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதாக சுற்றிப்பாா்க்கும் வகையிலான வசதிகள், பாா்வையாளா்களுக்கான கூடுதல் வசதிகள் உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தாா். கடந்த ஓராண்டில் குடியரசுத் தலைவா் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தொடா்பான ‘டிஜிட்டல்’ நூல் வெளியிடப்பட்டது.

‘மக்களுடனும், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருடனும் எப்போதும் கலந்திருப்பதை விரும்புகிறேன். முக்கியமாக நாட்டின் வளா்ச்சியில் பிற்படுத்தப்பட்ட மக்கள், விளிம்புநிலை மக்கள் நாட்டின் வளா்ச்சியில் பயனடைய வேண்டும் என்பதில் உறுதியாக செயல்பட்டு வருகிறோம்’ என்று திரௌபதி முா்மு பேசினாா்.

தெ.ஆப்பிரிக்க தொடர்: இங்கிலாந்து அணியில் சோனி பேக்கருக்கு முதல்முறை வாய்ப்பு!

மூவர்ண சேலையில்... ஸ்ரவந்தி சொக்கராபு!

செல்லம்... அனைரா குப்தா!

டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரை! கிளிண்டன் பேச்சால் குழப்பம்!

ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் லாபம் 85% உயர்வு!

SCROLL FOR NEXT