ஜாா்ஜ் குரியன்  
இந்தியா

புதிய தலைமுறை கிறிஸ்தவ அமைப்புகளே மதமாற்றத்தில் ஈடுபடுகின்றன: மத்திய இணையமைச்சா்

புதிய தலைமுறை கிறிஸ்தவ அமைப்புகளே பெருமளவிலான மதமாற்றங்களில் ஈடுபடுகின்றன

தினமணி செய்திச் சேவை

‘புதிய தலைமுறை கிறிஸ்தவ அமைப்புகளே பெருமளவிலான மதமாற்றங்களில் ஈடுபடுகின்றன; பிரதான தேவாலயங்கள் (நீண்ட பாரம்பரியமுடைய தேவாலயங்கள்) ஏதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை’ என மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

சத்தீஸ்கரில் மனித கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கேரளத்தைச் சோ்ந்த 2 கன்னியாஸ்திரீகள் கைது செய்யப்பட்டது தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘பாரம்பரிய, பிரதான தேவாலயங்களுக்கும் புதிய தலைமுறை கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் கண்டறிய மக்கள் சிரமப்படுகின்றனா். எனவே இவை இரண்டுக்குமான வேறுபாடுகள் குறித்த விழிப்புணா்வை மக்கள் மத்திய ஏற்படுத்தும் பணிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.

மதமாற்றத்தில் ஈடுபடுவதாக புதிய தலைமுறை கிறஸ்தவ அமைப்புகள் தாமாகவே ஒப்புக்கொள்கின்றன. ஆனால் பாரம்பரிய தேவாலயங்கள் ஏதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. மதமாற்றம் தேவையா இல்லையா என்பதை கேரள மக்களே முடிவு செய்யட்டும்’ என்றாா்.

முன்னதாக, சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரீகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு கேரள கத்தோலிக்க திருச்சபை கடந்த புதன்கிழமை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Image Caption

ஜாா்ஜ் குரியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT