ஜோதி மல்ஹோத்ரா 
இந்தியா

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி

DIN

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

மேலும், அவர் உள்பட பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வேறு சிலரிடமும் பாதுகாப்புத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கேரளத்துக்கு ஜோதி மல்ஹோத்ரா சென்றிருப்பதும், கேரள சுற்றுலாத் துறையே அவருக்கு அழைப்பு விடுத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

அதுமட்டுமின்றி, கேரள முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸ்தான் அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ளார். இதனால், அவர் மீது விசாரணை நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, பாஜக கூறுகையில், பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் கேரள சுற்றுப்பயணத்துக்கு அம்மாநில சுற்றுலாத் துறைதான் உதவியுள்ளது.

கேரள சுற்றுலாத் துறையின் அமைச்சரானவர், முதல்வர் பினராயி விஜயனின் மருமகனே. ஜோதி மல்ஹோத்ரா கேரளத்தில் யாரைச் சந்தித்தார்?

அவர் கேரளத்தில் எங்கு சென்றார்? அவர் சென்றதற்கான உண்மை நோக்கம் என்ன? அவருக்கு கேரள அரசு ஏன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தது? என்று கேள்வி எழுப்பியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழ்நாள் கொண்டாட்டம்... பரமேஸ்வரி!

நடிகரின் பாதுகாவலருக்கு மாதம் ரூ.15 லட்சம் சம்பளம்! ரூ.100 கோடி சொத்து?

உடல் எடையைக் குறைத்த நிவேதா தாமஸ்!

வினிசியஸ் அசத்தல்: முதலிடத்தில் ரியல் மாட்ரிட்!

நடனமாடி ஓணம் கொண்டாடிய தில்லி முதல்வர் ரேகா குப்தா!

SCROLL FOR NEXT