கைது செய்யப்பட்ட ஷர்மிஸ்தா. 
இந்தியா

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் கங்கனா, பவண் எதிர்ப்பு தெரிவித்துள்ளதைப் பற்றி...

DIN

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 22 வயதான சட்டக் கல்லூரி மாணவி ஷர்மிஸ்தா பனோலி, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்கள் குறித்து பாலிவுட் நடிகர்கள் மௌனம் காத்ததாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனால், அவரை மே 30 ஆம் தேதியன்று குருகிராமில் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனைக் கண்டித்து அரசியல் தலைவர்கள் பலரும் திரிணாமுல் காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரணாவத், பனோலியை ஆதரித்து, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்கனா கூறுகையில், “ஷர்மிஸ்தா சில விரும்பத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இப்போது பெரும்பாலான இளைஞர்கள் அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். அவர் தனது பதிவுக்கு மன்னிப்பும் கேட்டார். அனைவருக்கும் ஜனநாயக உரிமைகள் உள்ளன. மேற்கு வங்கத்தை வட கொரியாவாக மாற்ற முயற்சிக்க வேண்டாம்” என்று வலியுறுத்தினார்.

பனோலியின் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மமதா பானர்ஜியின் சர்ச்சைக்குரிய கருத்துகளின் விடியோவை ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் பகிர்ந்துள்ளார்.

பவண் கல்யாண் பகிர்ந்துள்ள அந்த விடியோவில், பாஜக அரசு மேற்கு வங்கத்தில் பிளவு அரசியல் மூலம் வகுப்புவாத கலவரங்களைத் தூண்ட முயற்சிப்பதாக மமதா பானர்ஜி கூறியிருப்பதும் இடம்பெற்றுள்ளது.

மேலும், அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ஷர்மிஸ்தா பகிர்ந்த விடியோ சிலரை புண்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் எதிர்ப்புகள எழும்பிய நிலையில் விடியோவை நீக்கிவிட்டார். ஷர்மிஸ்தா மீது மேற்கு வங்க காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து நடவடிக்கை எடுத்தது.

ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சனாதன தர்மத்தை கேலி செய்யும் போது பல லட்சக்கணக்கானவர்களுக்கு ஏற்படும் ஆழமான, கடுமையான வலியைப் பற்றி என்ன? செய்வது... அவர்களின் மன்னிப்பு எங்கே? அவர்களின் விரைவான கைது எங்கே?" என்று அவர் கேட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர் - பாலிவுட் நடிகர்கள் குறித்த சர்ச்சையினால் கைதான இன்ஸ்டா பிரபலம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT