சிறுமி பலி கோப்புப்படம்
இந்தியா

பிகாரில் பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தறுக்கப்பட்ட சிறுமி! உடனடி சிகிச்சை கிடைக்காமல் பலியான அவலம்!

பிகாரில் பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்துக்கு உள்ளான சிறுமி, சிகிச்சைக்கு 5 மணி நேரம் காத்திருந்து பலியாகியிருக்கிறார்.

DIN

பாட்னா: பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுமி சிகிச்சைக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பலியாகியுள்ளார்.

பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்த நபரால், கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த 9 வயது சிறுமி சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகிய சம்பவம் ஒரு வாரத்துக்குப் பிறகே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ரத்த வெள்ளத்தில் இருந்த தனது மகளைப் பார்த்த தாய், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சிறுமியை அனுமதிக்காமல் பாட்னா கொண்டு செல்ல அறிவுறுத்தியிருக்கிறார்கள். அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட சிறுமி, பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், படுக்கை வசதி ஒதுக்கப்படுவதற்காக 6 மணி நேரம் காக்கவைக்கப்பட்டு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே அவர் பலியாகியிருக்கிறார்.

உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததே மகள் பலியானதாக அவரது குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், பிகார் மாநில சட்டம் ஒழுங்கு மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் சிறுமி காப்பாற்றப்பட்டிருப்பார் என்று மக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த சம்பவம் மே 26ஆம் தேதி நடந்துள்ளது. அதற்கடுத்த நாள் சிறுமி பலியாகியுள்ளார்.

சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ரோஹித் சாஹ்னி என்ற நபர், மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியை அளில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டுத்தப்பியிருக்கிறார்.

மகளைக் காணவில்லை என்று தேடி வந்த தாயிடம், அக்கம் பக்கத்தினர், அவர் ரோஹித்துடன் சென்றதாகக் கூறியிருக்கிறார்கள். ரோஹித்திடம் தாய் விசாரித்தபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

உடனடியாக விரைந்துச் சென்ற தாய், மகளை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மருத்துவமனையில் அலைக்கழிக்கப்பட்ட நிலையில், சிறுமி பலியாகியிருக்கிறார். சிறுமியின் உறவினர்கள், ஏற்கனவே ஆம்புலன்ஸ் வர 2 மணி நேரம் ஆனது. பிறகு மருத்துவமனை மருத்துவமனையாக அலைந்தோம். மருத்துவமனை வாயிலேயே, படுக்கை ஒதுக்கப்படுவதற்காக 6 மணிநேரம் காத்திருந்தோம். அதற்கடுத்த நாளே அவர் இறந்துவிட்டார் என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனைத்தையும் சொந்தம் கொண்டாட நினைக்கிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

குஜராத்தில் பிரதமர் மோடி சாலைவலம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு!

யோலோ டீசர்!

மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!

குடியரசுத் தலைவருடன் ஃபிஜி பிரதமர் சந்திப்பு!

SCROLL FOR NEXT