கோப்புப் படம் 
இந்தியா

மேற்கு வங்கம்: புதியதாக 41 கரோனா பாதிப்புகள் உறுதி! ஒருவர் பலி!

மேற்கு வங்கத்தில் புதியதாக 41 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

DIN

மேற்கு வங்க மாநிலத்தில் புதியதாக 41 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று தற்போது மீண்டும் பரவி வரும் சூழலில் நாள்தோறும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் புதியதாக 41 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக, அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இத்துடன், சிறுநீரகம் மற்றும் இதய நோய் பிரச்னைகளால் ஹவுராவைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, கரோனா பாதிப்பினால் நேற்று (ஜூன் 2) இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், அம்மாநிலத்தில் கரோனா பாதிப்புக்குச் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 372 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்; பிரதமருக்கு இந்தியா கூட்டணி கடிதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்ட நீா் நிலைகளில் விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்: ஆட்சியர்

ஆடி கிருத்திகை: பெரம்பலூா் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

வட இந்தியாவில் மழைக்கு 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு: ஜப்பான் பிரதமா் இரங்கல்

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவா் கைது!

தஞ்சாவூா் மாநகரில் ஆக.19-ல் மின் தடை

SCROLL FOR NEXT