கோப்புப் படம் 
இந்தியா

மே.வங்கத்தில் ஒரே நாளில் 60 பேருக்கு கரோனா பாதிப்பு!

மேற்கு வங்கத்தில் புதியதாக 60 கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளன.

DIN

மேற்கு வங்கத்தில் புதியதாக 60 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 60 புதிய கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், அம்மாநிலத்தில் கரோனா தொற்றிலிருந்து 28 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால், நேற்று (ஜூன் 3) தனியார் மருத்துவமனையில் 7 மாத குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இத்துடன், தற்போது அம்மாநிலத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கரோனா பாதிப்பினால் ஹவுராவைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவர் கடந்த ஜூன் 3 ஆம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: குஜராத்தில் 461 ஆக உயர்ந்த கரோனா பாதிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜு

கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!

ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்

கண்கள் பேசும்... சோஃபியா!

SCROLL FOR NEXT